சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் இரண்டு கிராம மக்களை நக்சல்கள் கொன்றதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பமேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செண்ட்ராபோர் மற்றும் ஏம்பூர் கிராமங்களில் இரண்டு கிராமவாசிகள் நக்சல்களால் கொடூரமாக கொலை செய்தனர்.
கொலைகளுக்கான காரணம் மற்றும் குற்றம் எப்போது நடந்தது என்பதை சரிபார்த்து வருகிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ராய்ப்பூர் வருகை தரவுள்ளார். அவர் சத்தீஸ்கருக்கு வருகை தருவதற்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்துள்ளது.
கடந்த ஜூன் 17ஆம் தேதி, பிஜாப்பூர் மாவட்டத்தின் பெத்தகோர்மா பிஜாப்பூர் கிராமத்தில் 13 வயது சிறுவன் உட்பட மூன்று கிராமவாசிகளை நக்சல்கள் கயிற்றைப் பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொன்றனர்.
பலியான மூவரில் இருவர், இந்த ஆண்டு மார்ச் மாதம் காவல்துறையில் சரணடைந்த மூத்த மாவோயிஸ்ட் போராளி தினேஷ் மோடியத்தின் உறவினர்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.