ஆம் ஆத்மி வேட்பாளர் சஞ்சீவ் அரோரா 
இந்தியா

பஞ்சாப்: லூதியானா மேற்கு தொகுதியைத் தக்கவைத்த ஆம் ஆத்மி!

ஆளும் ஆம் ஆத்மி கட்சி லூதியானா மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் ஆட்சியை மீண்டும் தக்க வைத்துள்ளது.

DIN

பஞ்சாபின் ஆளும் ஆம் ஆத்மி கட்சி லூதியானா மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் ஆட்சியை மீண்டும் தக்க வைத்துள்ளது.

லூதியானா மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் சஞ்சீவ் அரோராவின் நெருங்கிய போட்டியாளரான காங்கிரஸ் வேட்பாளருமான பரத் பூஷண் ஆஷுவையும், பாஜகவைச் சேர்ந்த ஜீவன் குப்தாவையும் எதிர்கொண்டார்.

இந்த நிலையில் சஞ்சீவ் அரோரா 35,179 வாக்குகளும், பரத் பூஷண் ஆஷு 24,542 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனிடையே ஆம் ஆத்மி

10,637 வாக்குகள் வித்தியாசத்தில் பரத் பூஷணை தோற்கடித்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

பாஜகவின் ஜீவன் குப்ரா 20, 323 வாக்குகளையும், சிரோமணி அகாலிதள வேட்பாளர் பருப்கர் சிங் குமான் 8,203 வாக்குகளையும் பெற்றார்.

ஜனவரியில் ஆம் ஆத்மி எல்ஏஏ குர்பிரீத் பாஸி கோகி இறந்ததைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் வைக்கப்பட்டுள்ளது.

ஜூன் 19ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலுக்காக வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு கல்சா மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்ட மையத்தில் தொடங்கியது.

ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து, அரோராவின் இல்லத்திலும் லூதியானாவில் உள்ள கட்சி அலுவலகத்திலும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!

உயர்கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

2025-ல் மட்டும் 600-க்கும் அதிகமான பயங்கரவாதத் தாக்குதல்கள்! எங்கு தெரியுமா?

இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிக்கிறது? வரிவிதிப்புக்கு அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு!

MKStalin vs Vijay | TKS Elangovan நேர்காணல் | MKStalin | vijayakanth | DMK | TVK

SCROLL FOR NEXT