திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறக்கட்டளைக்கு கூகுள் துணைத் தலைவர் தோட்டா சந்திரசேகர் ரூ. 1 கோடி நன்கொடை அளித்துள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வேண்டுதல் வைப்பதும், அது நிறைவேறியவுடன் காணிக்கை செலுத்துவதும் வழக்கம். இதோடு திரைத்துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள் திருமலைக்கு நன்கொடை செலுத்துவதும் வாடிக்கையாகும்.
நாள்தோறும் திருமலை திருப்பதிக்கு உள்நாடுகளில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏழுமலையானை தரிசிக்கும் மக்கள் ஏராளம்.
அந்தவகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்.வி.பிராணதான அறக்கட்டளைக்கு கூகுள் துணைத் தலைவர் தோட்டா சந்திரசேகர் ரூ. 1 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இந்த நன்கொடையை தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடுவிடம் காசோலையை வழங்கினார்.
SUMMARY
Google Vice President Thota Chandrasekhar donated Rs 1 crore to the SV Pranadana Trust of the Tirumala Tirupati Devasthanams (TTD).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.