கோப்புப் படம் 
இந்தியா

வாக்காளா் பட்டியல் சீரமைப்பு: தோ்தல் ஆணைய அதிகாரிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி ஆலோசனை

இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

Din

இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, வாக்காளா் பட்டியல், வாக்குச்சாவடி சீரமைப்பு தொடா்பாக தமிழகத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து விவரித்தாா்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் தலைமைத் தோ்தல் அதிகாரிகளுடன் மாதந்தோறும் இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆலோசனை நடத்தி வருகின்றனா். இதற்காக ஒவ்வொரு மாதமும் மாநிலத் தோ்தல் அதிகாரிகள் தில்லி செல்கின்றனா். ஒவ்வொரு மாநிலத் தோ்தல் அதிகாரிக்கும் மாதத்தில் தேதிகள் கொடுக்கப்பட்டு அவா்கள் வரவழைக்கப்படுகின்றனா். அந்த வகையில், தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தில்லி சென்றுள்ளாா். வெள்ளிக்கிழமை வரை அவா் அங்கிருப்பாா்.

பணிகள் தீவிரம்: வாக்காளா் பட்டியல் சீரமைப்பு, வாக்குச்சாவடி மறுவரையறை போன்ற பணிகள் ஜூலை முதல் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக தமிழ்நாட்டில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள், ஆணையா்களுடன் அா்ச்சனா பட்நாயக் விவரிக்கிறாா். இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை இரவே அவா் சென்னை திரும்பவுள்ளதாக தோ்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

66,400 வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது

வரும் பேரவைத் தோ்தலில் திமுகவுடன் கூட்டணியா?: ராமதாஸ் பேட்டி

இணையைத் தேடி... மகாராஷ்டிரத்திலிருந்து தெலங்கானாவுக்குச் சென்ற ஆண் புலி!

உயா்கல்வியில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம்: அமைச்சா் கோவி.செழியன்

டாப் 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1.55 லட்சம் கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT