பிரதிப் படம் ENS
இந்தியா

அதிகளவில் நீர்ப் பயன்பாடு! விவசாயத்துக்கும் வரி விதிக்கும் மத்திய அரசு?

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதைத் தவிர்க்க விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் நீருக்கு மத்திய அரசு வரி விதிக்கவிருப்பதாகத் தகவல்

DIN

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதைத் தவிர்க்க, விவசாய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் நீருக்கு மத்திய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல், பல்வேறு மாநிலங்களில் 22 முன்மாதிரித் திட்டங்களைத் தொடங்கவுள்ளோம்.

விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீர் அளவைப் பொறுத்து வரி விதிக்கப்படும். இதன் மூலம், தங்களின் தேவைக்கேற்ப மட்டுமே அவர்கள் பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

வருடாந்திர அறிக்கைப்படி, நிலத்தடியில் இருந்து எடுக்கப்படும் நீரில் 239.16 பில்லியன் கன மீட்டர்களில் 87 சதவிகிதத்தை விவசாயத் துறைதான் பயன்படுத்துகிறது.

இந்த வரிவிதிப்பின் மூலம், நிலத்தடி நீரை அனாவசியமாக பயன்படுத்துதல் குறையும் என்று அவர் விளக்கியுள்ளார்.

மேலும், விதிக்கப்படும் வரியை அந்தந்த உள்ளூர் நீர் பயனர் சங்கங்களே தீர்மானிக்கும் என்று குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையின் கூடுதல் செயலாளர் அசோக் கே மீனா தெரிவித்தார்.

இதையும் படிக்க: பழம்பெருமைமிகு இந்தியா... முந்தைப் பெருமிதங்களும் இன்றைய பொருளாதாரமும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT