இந்தியா

அயோத்தி ராமர் கோயில்: 5.5 கோடி பக்தர்கள் வருகை!

அயோத்தி ராமர் கோயிலின் முதல் நாளிலிருந்து இதுவரையில் உலகம் முழுவதிலும் இருந்து 5.5 கோடி பக்தர்கள் வருகை

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அயோத்தி ராமர் கோயிலுக்கு 5.5 கோடி பக்தர்கள் வருகை தந்திருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அயோத்தியில் கடந்தாண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஸ்ரீ பாலராமரின் பிராணப் பிரதிஷ்டை கோலாகலமாக நடைபெற்றது.

இந்தக் கோயிலுக்கு, நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள வருகை தருகின்றனர்.

இந்த நிலையில், கோயிலின் முதல் நாளிலிருந்து இதுவரையில் உலகம் முழுவதிலும் இருந்து 5.5 கோடி பக்தர்கள் வருகை தந்திருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என கிட்டத்தட்ட 4.5 லட்சம் முக்கிய பிரமுகர்கள் வருகைதந்து, கோயிலில் மரியாதை செலுத்தியதாகவும் தெரிவித்தது.

பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோதிலும், நிர்வாகப் பணிகள் மட்டுப்படுத்தப்படவில்லை என்று கூறியது. முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைவருக்குமான தரிசனத்துக்கான ஏற்பாடுகள், சுமூகமான வருகை எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

உலகளவில் ஒரு முக்கிய மத ஆலயமாக அயோத்தி திகழ்வதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நெகிழ்ச்சியுடன் கூறினார். வரும் காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: ஏர் இந்தியா ஊழியர்கள் கொண்டாட்டம்! சர்ச்சை விடியோவால் 4 பேர் பணிநீக்கம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யார் சொன்னது, இந்த நிறம் வேண்டாமென... பிரியா மணி!

பணி நீக்கம்! 15% மனிதவள அதிகாரிகளை வெளியேற்றும் அமேசான்!

அன்பே வா... துபை பாலை... உன்னாட்டி தோமர்!

தொடர் மழை: அக். 21 வரை சதுரகிரி மலையேற பக்தர்களுக்குத் தடை

தீபாவளி, லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்!

SCROLL FOR NEXT