13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடை! ஆந்திரப் பிரதேசம் அதிரடி!
ஆந்திரப் பிரதேசத்தில் 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடை விதிப்பது குறித்து...
ஆந்திரப் பிரதேசத்தில், 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படும் என்றும், அடுத்த 90 நாள்களில் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும், இந்தத் தடையை 13 முதல் 16 வயதுடையவர்களுக்கும் நீட்டிப்பது குறித்து அரசு ஆலோசித்து முடிவெடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
முன்னதாக, கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாக, அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
இவ்வாறு, சிறார்களின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் மாநிலங்கள் அதிரடி முடிவை வெளியிட்டிருப்பது கவனம் பெற்றிருக்கின்றது. அதேவேளையில், இது போன்ற நடவடிக்கைகள் மாணவர்களுக்குப் பின்விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
The Chief Minister of Andhra Pradesh has announced that children under the age of 13 will be banned from using social media.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.