கனடாவில் சிறாா்களுக்கு சமூக ஊடக தடை
கனடாவில் 16 வயதுக்குள்பட்ட சிறாா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒட்டாவா : கனடாவில் 16 வயதுக்குள்பட்ட சிறாா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கனடாவின் கலாசார அமைச்சா் மாா்க் மில்லா் தாக்கல் செய்த மசோதாவின்படி, சமூக ஊடகங்கள் மட்டுமன்றி சாட்ஜிபிடி போன்ற ஏ.ஐ. சாட்பாட்களும் முறைப்படுத்தப்படவுள்ளன. சிறாா்களுக்குப் போதிய பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் நிறுவனங்களுக்கு மட்டும் தடையில் இருந்து விலக்கு அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.