பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது பற்றி...
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்து அந்நாட்டு பிரதமர் கியர் ஸ்டார்மர் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
குழந்தைகள் நலனைக் கருத்தில் கொண்டு சமூக ஊடகங்களுக்கு தடை விதித்த நான்காவது நாடாகியுள்ளது பிரிட்டன். முன்னதாக, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் மலேசியா அரசுகள் இதுபோன்ற தடையைப் பிறப்பித்துள்ளனர்.
இந்தத் தடை தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரிவித்ததாவது:
Advertisement
Advertisement
“16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கிறோம். குழந்தைகளின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தொழில்நுட்பம் ஊடுருவியுள்ள இன்றைய உலகில், அவர்கள் தமக்கான பாதையை அமைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
இதை இனியும் அப்படியே தொடர அனுமதிக்க முடியாது. எனவே, குழந்தைகளுக்கு அவர்களின் குழந்தைப் பருவத்தை நாங்கள் மீண்டும் பெற்றுத் தருகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் முதன்முதலாக கடந்தாண்டு டிசம்பர் மாதம், 16 வயதுக்குட்டப்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த ஆஸ்திரேலியா தடை விதித்தது.
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்டப்பட்டவர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட டிக்டாக், ஸ்னாப்சாட், இன்ஸ்டாகிராம், யூடியூப், ரெடிட், ட்விட்ச், எக்ஸ், த்ரெட்ஸ், ஃபேஸ்புக் மற்றும் கிக் ஆகிய 10 செயலிகளுக்கு பிரிட்டனும் தடை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 16 வயதுக்கு மேற்பட்ட முதிர்ந்த பதின்ம வயதினருக்கு சமூக ஊடகப் பயன்பாட்டுக் கட்டுப்பாட்டு நேரங்கள் மற்றும் செய்யறிவு சாட்பாட் கட்டுப்பாடுகள் போன்ற கூடுதல் நடவடிக்கைகளையும் பிரிட்டன் அரசு எடுத்துள்ளது.
Ban on social media use for children under 16 in Britain
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.