கேரள முதல்வா் பினராயி விஜயன். கோப்புப்படம்.
இந்தியா

கேரள முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களுக்கு இடையூறு: 5 பேர் கைது

கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்று கொண்டிருந்த வாகனத்துடன் பாதுகாப்புக்குச் சென்ற வாகனங்களுக்கு இடையூறு செய்யும் வகையில் வாகனத்தை ஓட்டிய சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

DIN

கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்று கொண்டிருந்த வாகனத்துடன் பாதுகாப்புக்குச் சென்ற வாகனங்களுக்கு இடையூறு செய்யும் வகையில் வாகனத்தை ஓட்டிய சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள முதல்வர் பினராயி விஜய் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில், அரசு விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார்.

எலத்தூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களுக்கு இடையூறு செய்யும் விதமாக குறுக்கே மற்றொரு வாகனம் வந்திருக்கிறது.

விலகிச் செல்லுமாறு 3 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் பாதுகாப்பு வாகனங்களுக்கு குறுக்கே அவர்கள் நுழைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

பிறகு வெஸ்ட் ஹில் சுங்கத்தில் வாகனத்தை தடுத்து நிறுத்தி, அதிலிருந்த 5 பேரையும் கைது செய்தனர். விசாரணையில், ​​அவர்கள் கண்ணூரிலிருந்து பாலக்காடுக்குச் செல்லும் மின் ஊழியர்கள் என்று போலீஸாரிடம் தெரிவித்தனர்.

5 பேரும் கண்ணூர், மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும அவர்கள் மீது எந்த குற்றப் பதிவும் இல்லை என்றும் போலீஸார் மேலும் கூறினர்.

ஆரம்பத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட அவர்கள் பின்னர் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Summary

Five men have been taken into custody after their vehicle entered the convoy of Kerala Chief Minister Pinarayi Vijayan, police said here on Monday.

கர்நாடக முதல்வர் மாற்றமா? எம்.எல்.ஏ.க்களுடன் தனித்தனியாக காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு சென்ற காரில் தீ: 4 போ் தப்பினா்

பறிமுதல் வாகனங்கள் ஆக.25-ல் பொது ஏலம்!

வாசுதேவநல்லூா்: விபத்தில் காயமடைந்த முதியவா் பலி!

சநாதனம் ஒற்றுமையையே வலியுறுத்துகிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி

இந்திய குத்துச்சண்டை அணிகள் சீனா பயணம்

SCROLL FOR NEXT