ரயில் கட்டண உயர்வு நாளைமுதல்(ஜூலை 1) அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்களின் பயணக் கட்டணத்தை உயர்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வந்த நிலையில், நாளை முதல் அமல்படுத்துவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி மெயில் மற்றும் விரைவு ரயில்களில் கி.மீ.க்கு 1 பைசாவும் ஏசி ரயிலில் கி.மீ.க்கு 2 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண படுக்கை வசதி மற்றும் முதல் வகுப்பு பயணக் கட்டணம் கி.மீட்டருக்கு அரை பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
எனினும் தினசரி பயணிகளின் நலன் கருதி புறநகர் ரயில் பயணச்சீட்டு கட்டணம் மற்றும் மாதாந்திர பயணச்சீட்டுக் கட்டணம் உயா்த்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
500 கி.மீ. வரையிலான இரண்டாம் வகுப்பு பயணத்துக்கு கட்டணம் உயா்த்தப்படவில்லை. 500 - 1500 கி.மீ. தூரத்துக்கு ரூ.5ம், 1501- 2500 கி.மீ. தூரத்துக்கு ரூ.10ம், 2500-3000 கி.மீ. தூரத்துக்கு ரூ.15ம் உயர்த்தப்பட்டுள்ளது.
பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு குளிரூட்டப்படாத வகுப்பு பயணக் கட்டணம் கி.மீ.க்கு 1 பைசாவும் அனைத்து விதமான குளிரூட்டப்பட்ட வகுப்பு பயணக் கட்டணம் கி.மீ.க்கு 2 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
Indian Railways has announced that the rail fare hike will come into effect from tomorrow (July 1).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.