ஜார்க்கண்ட்: ஒரே மாதத்தில் யானையின் 3ஆவது உடல் கண்டெடுப்பு
ஜார்க்கண்டில் ஒரே மாதத்தில் யானையின் 3ஆவது உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்டில் ஒரே மாதத்தில் யானையின் 3ஆவது உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் லதேஹர் மாவட்டத்தில் உள்ள பலமு புலிகள் காப்பகத்தில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக சனிக்கிழமை பிற்பகல் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
நிகழ்விடத்துக்கு விரைந்த வன அதிகாரிகள் பெட்லா மலைத்தொடருக்கு உட்பட்ட தெல்லி மலைப்பகுதியில் இருந்து யானையின் உடலை மீட்டனர்.
Advertisement
Advertisement
இதன்மூலம் லதேஹர் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் காட்டுயானையின் 3ஆவது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. யானைகளுக்கு இடையிலான மோதல்களில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தில்லி: 15 ஆண்டுகளுக்கு முந்தைய வாகனங்களைக் கண்டறிவது எப்படி?
பெட்லா வன அதிகாரி உமேஷ் துபே கூறுகையில், வியாழனன்று டீன் கோரியா அருகே யானையுடன் ஏற்பட்ட மோதலின் போது யானை ஒன்றுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால், சிகிச்சை அளித்த இடத்தை விட்டு வெளியேறி, சனிக்கிழமை யானையைத் தேடியபோது தெல்லி மலை அருகே அதன் சடலம் கண்டெடுக்கப்பட்டது தெரிவித்தார்.
யானையின் உடல் உடற்கூராய்வுக்குப் பின் புதைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.