யாக பூஜையில் ரசிகர்கள் ANI
இந்தியா

இந்திய அணி வெற்றிக்காக யாக பூஜை செய்த ரசிகர்கள்!

இந்திய அணி வெற்றிபெற வேண்டி கிரிக்கெட் ஜெர்சி அணிந்து யாகம் வளர்த்து பூஜை செய்த ரசிகர்கள்...

DIN

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற வேண்டி ரசிகர்கள் யாகம் வளர்த்து பூஜை செய்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் உள்ள இளைஞர்கள் தங்கள் வீட்டில் உறவினர்களுடன் சேர்ந்து யாகம் வளர்த்து பூஜையில் ஈடுபட்டனர்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டி துபை சர்வதேச திடலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

2021-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து கோப்பையை கைப்பற்றியிருந்தது.

இதற்கு பதிலடி தரும் வகையில் இன்று இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் நாடு முழுவதுமுள்ள ரசிகர்கள் இந்திய அணியின் ஆட்டத்தை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

மறுபுறம் சில ரசிகர்கள் இந்திய அணி வெற்றிக்காக பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் யாகம் வளர்த்து பூஜையில் ஈடுபட்டனர். இது குறித்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க | கஞ்சாவுடன் ஆவேஷம் பட ஒப்பனை கலைஞர் கைது

இதையும் படிக்க | சொல்லப் போனால்... திருடனுக்கு சாவியைப் பரிசளிக்கும் புதிய நீதி?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

கிருஷ்ணகிரியில் தீண்டாமை ஒழிப்பு: முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT