ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது
ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது
ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக கூறி இரட்டைக் குழந்தைகளை தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டத்தில் வசித்து வருபவர் மகேஷ் சக்லனி. இவருடைய மனைவி சுபாங்கி. இவர்களுக்கு ஆறு மாத இரட்டைக் குழந்தைகள் இருந்தன. இத்தம்பதியுடைய குழந்தைகளின் திடீர் மரணம் தந்தை மகேஷ் சக்லனிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், தனது மனைவி கடைக்குச் சென்று பால் வாங்கிவிட்டு திரும்பி வந்தபோது இரண்டு குழந்தைகளும் மயக்கமடைந்திருப்பதைக் கண்டார். உடனே அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் குழந்தைகள் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த புகாரையடுத்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.
Advertisement
Advertisement
கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனியை பாதித்திருக்கும் புற்றுநோய் என்ன?
விசாரணையில் தாயே தலையணையை வைத்து குழந்தைகளை கொன்றிருப்பது தெரியவந்தது. தனது குழந்தைகளின் தொடர்ச்சியான அழுகையால் தான் விரக்தியடைந்ததாகவும், அது தன்னை தூங்க விடாமல் தடுத்ததாகவும் அந்தப் பெண் கூறியிருக்கிறார். இதன்காரணமாகவே குழந்தைகளைக் கொன்றதாக குற்றத்தை தாய் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் ஹரித்வாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.