பிரதமர் நரேந்திர மோடி 
இந்தியா

வாழ்க்கையின் நோக்கத்தை அறிய உதவியது ஆர்.எஸ்.எஸ்: மோடி

வாழ்க்கையின் நோக்கத்தை அறிய ஆர்.எஸ்.எஸ். தனக்கு உதவியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

DIN

வாழ்க்கையின் நோக்கத்தை அறிய ஆர்.எஸ்.எஸ். தனக்கு உதவியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

செய்யறிவு தொழில்நுட்ப ஆய்வாளர் லெக்ஸ் ஃபிரிட்மேன் உடனான நேர்காணலின்போது ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஏஐ குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,

''ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) மூலம் வாழ்க்கையின் நோக்கத்தை அறிய முடிந்தது. அங்கு சில நாள்களை கழித்ததை பாக்கியமாகக் கருதுகிறேன். அது மிகவும் வலுவான ஆன்மிக அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தது. ஒழுக்கம் மற்றும் வாழ்க்கையின் மதிப்பீடுகளை அங்கு நான் அறிந்துகொண்டேன்.

இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஊழியர்கள் என பல்வேறுதரப்பினரின் வாழ்க்கையிலும் இது பங்காற்றுகிறது. பொது வாழ்க்கையின் திசைதிருப்பல்களில் இருந்து விலகி ஒழுக்கம் மற்றும் ஆன்மிகத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டது ஆர்.எஸ்.எஸ்; அங்கு வாழ்க்கையின் சில பகுதிகளைக் கழித்ததை அதிருஷ்டமாகப் பார்க்கிறேன்'' எனக் குறிப்பிட்டார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேரும்போது தனக்கு 8 வயது என்றும் இந்து தேசியம் என்ற கருத்து வேரூன்றியது அங்குதான் எனவும் சுட்டிக்காட்டினார்.

அரசியல் வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்விலும் ஆர்.எஸ்.எஸ். ஏற்படுத்திய தாக்கம் குறித்து லெக்ஸ் ஃபிரிட்மேன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மோடி, ''எங்கள் கிராமத்தில் ஆர்.எஸ்.எஸ். கிளை உள்ளது. அங்கு நாங்கள் விளையாடுவோம்; தேசப் பற்று பாடல்களைப் பாடுவோம். அந்தப் பாடல்கள் ஏதோவொரு வகையில் என்னில் ஆழமாகப் படிந்துவிட்டது.

அது எனக்குள் ஏற்படுத்திய மாற்றங்களால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அங்கமாக என்னை மாற்றியது. அங்கு நாங்கள் கற்றுக்கொண்ட மிகுந்த மதிப்புமிக்க செயல் என்னவென்றால், நீங்கள் எதைச் செய்தாலும், அதனை ஒரு நோக்கத்துக்காகவே செய்ய வேண்டும் என்பதுதான். அதனை அரசியல் வாழ்க்கையிலும் கடைபிடிக்கிறேன்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | கேதர்நாத் யாத்திரை: ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்குத் தடை விதிக்க பாஜக கோரிக்கை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.8 ஆகப் பதிவு

வாணியம்பாடியில் செப். 8-இல் தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம்

மேட்டூர் அணை நிலவரம்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8 ஆகப் பதிவு

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை!

SCROLL FOR NEXT