முகப்பு
இந்தியா

நாக்பூர் வன்முறை: ஊரடங்கு உத்தரவு!

ஒளரங்கசீப் விவகாரத்தில் நாக்பூரில் ஏற்பட்ட வன்முறை பற்றி...

Updated On : 18 மார்ச், 2025 at 4:34 AM
வன்முறையில் தீக்கிரையான வாகனங்கள்.
பகிர்:

நாக்பூரில் ஒளரங்கசீப் விவகாரத்தை முன்வைத்து ஹிந்து அமைப்புகள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னரான ஒளரங்கசீப்பில் கல்லறையை அகற்ற வேண்டும் என்று வலதுசாரி அமைப்பினர் நீண்ட நாள்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதன்தொடர்ச்சியாக விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், மத்திய நாக்பூர் பகுதியில் போராட்டம் நடத்துபவர்கள் இஸ்லாமியர்களின் புனித நூலை எரிப்பதாக தகவல் பரவிய நிலையில், போராட்டத்துக்கு இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறிய நிலையில், சாலையில் இருந்த வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்துள்ளனர்.

இந்த வன்முறை சம்பவத்தில் 15 போலீசார் உள்பட 20 பேர் காயமடைந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் ரவீந்தர் சிங்கால் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →