சத்தீஸ்கரில் நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்சல்கள் 22 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் காவலர் ஒருவர் மரணமடைந்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா, பிஜப்பூர், தண்டேவாடா பகுதிகளில் நக்சல்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் பிஜப்பூர் - தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் பாதுகாப்புப் படையினர் மற்றும் சத்தீஸ்கர் போலீசார் இணைந்து என்கவுன்டர் நடத்தினர்.
பிஜப்பூர் மாவட்டம் கங்கலூர் காவல் நிலையப் பகுதியில் நடைபெற்ற என்கவுன்டரில் 22 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கிகள், வெடிபொருள்களுடன் 18 நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
இதில் மாவட்ட ரிசர்வ் படை காவலர் ஒருவர் வீர மரணமடைந்தார்.
மேலும் கான்கர் மாவட்டத்தில் நான்கு நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து பாதுகாப்புக் குழுவினர், அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.