நிதீஷ் - மகன் நிஷாந்த் 
இந்தியா

நிதீஷ் குமார் மகனுக்கு திருமணமா? மணப்பெண் யார்?

நிதீஷ் குமார் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாகத் தகவல்.

இணையதளச் செய்திப் பிரிவு

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மகன் நிஷாந்த் குமார் (48) விரைவில் திருமண பந்தத்தில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டுக்குள் அவருக்கு திருமணம் நடைபெறவிருப்பதாகவும், மணப்பெண் தேர்வு நடந்துவிட்டதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த தகவல்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், தகவல்கள் வரும் ஏப்ரல் இறுதிக்குள் நிச்சயதார்த்தம் நடைபெறவிருப்பதாகக் கூறுகிறது.

இதுநாள் வரை அரசியல் வெளிச்சம் படாமல் ஒதுங்கியிருந்து வந்த நிஷாந்த், விரைவில், அரசியலில் நுழைவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அவரது திருமணம் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தில்லியில், மிகப் பிரமாண்டமாக திருமண நிச்சயதார்த்தம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், மணப்பெண் அரசியல் பின்புலம் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிச்சயதார்த்தத்தில் ஏராளமான அரசியல் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளதாகக் தெரிகிறது.

புது தில்லியில், அரசுத் துறையில் நிஷாந்த்தின் மணப்பெண் பணியாற்றி வருவதாகவும், நிதீஷ் குமாரின் அண்ணன் சதீஷ் குமார்தான், திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியில் முக்கிய நபர் கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 15ஆம் தேதி தலைநகர் தில்லியில் நிச்சயதார்த்தம் நடைபெறலாம் என்றும், ஹிந்து தர்மத்தில் கர்மாவின் காலம் என்று கூறப்படுவது ஏப்ரல் 14ஆம் தேதி நிறைவுபெறுவதால், அதற்கடுத்த நாள் திருமண நிச்சயதார்த்தத்துக்கு தேதி குறிக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த நிஷாந்த்

கடந்த 1975ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி பிறந்தவர் நிஷாந்த். அவருக்கு இப்போது 48 வயதாகிறது. பொறியியல் பட்டதாரியான இவர், அரசியலுக்குள் வராமல் இருந்து வந்தார். ஆன்மிக நாட்டம் அதிகம் கொண்டவர்.

அண்மையில், தனது தந்தைக்கு வாக்களிக்குமாறு பிகார் மக்களுக்கு கோரிக்கை வைத்திருந்தார் நிஷாந்த். இதன் மூலம் அவர் அரசியலுக்கு வரலாம் என்றும் திருமணம் முடிந்ததும் அவர் அரசியலுக்கு வருவார் என்றும் கூட சொல்லப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

77 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

விஜய் குறித்த கேள்விக்கு ”பேசவேண்டிய அவசியமில்லை” என பதிலளித்த முதல்வர் Stalin

வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: லிங்க்ட்இன்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரிப்பு

பழனிசாமி பயணம் போன்று எனது பயணம் இருக்காது: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT