கோப்புப் படம் 
இந்தியா

2,000 நகரங்களில் புதிய சேவையைத் தொடங்கும் ஏர்டெல்!

ஏர்டெல் நிறுவனம் தொலைக்காட்சிப் பிரியர்களுக்காக புதிய சேவையைத் தொடங்கியுள்ளது.

DIN

தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டுவரும் ஏர்டெல் நிறுவனம் தொலைக்காட்சிப் பிரியர்களுக்காக புதிய சேவையைத் தொடங்கியுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான படங்கள், இணையத் தொடர்களை கண்டுகளிக்கும் வகையில் ஐபிடிவி என்ற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

நெட்பிளிக்ஸ், அமேசான், ஆப்பிள் டிவி, சோனி லைவ் என 29 முன்னணி ஓடிடி தளங்கள் உள்பட 350க்கும் அதிகமான சேனல்களைக் கண்டுகளிக்கலாம்.

இவற்றுடன் அதிவேக இணைய வசதியும் (வைஃபை) வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கான ஆரம்ப விலையாக ரூ. 699 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடக்க நிலையில் இருப்பதால், வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், ஐபிடிவி திட்டத்தை ஏர்டெல் தேங்க்ஸ் செயலி மூலம் பெறுபவர்களுக்கு 30 நாள்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

தில்லி, ராஜஸ்தான், அஸ்ஸாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இச்சேவையை ஏர்டெல் நிறுவனம் தொடங்கியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களிலும் அடுத்தடுத்த சில வாரங்களில் இச்சேவை கிடைக்கும் வகையிலான பணிகளை ஏர்டெல் மேற்கொண்டுள்ளது.

இச்சேவையை ஏர்டெல்.இன் அல்லது ஏர்டெல் ஸ்டோர்ஸ் (airtel.in or Airtel stores) தளங்களிலும் வாடிக்கையாளர்கள் பெறலாம். ஏற்கெனவே ஏர்டெல் இணைய சேவையைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் முகவர்களிடம் கேட்டு ஐபிடிவி திட்டத்துக்கு மாறலாம் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் சரிந்ததையடுத்து சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்த தங்கம் விலை!

ஆடுஜீவிதம் எதனால் தேசிய விருது பெறவில்லை? ரசிகர்கள் ஆதங்கம்!

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்

வெளிச்சப் பூவே... வாமிகா கேபி!

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

SCROLL FOR NEXT