மாநிலங்களவையில் பேசிய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா். 
இந்தியா

இலங்கை சிறையில் 97 இந்திய மீனவா்கள்மாநிலங்களவையில் அமைச்சா் ஜெய்சங்கா் தகவல்

இலங்கை சிறைகளில் 97 இந்திய மீனவா்கள் தற்போது அடைக்கப்பட்டுள்ளனா் என்று மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

Din

இலங்கை சிறைகளில் 97 இந்திய மீனவா்கள் தற்போது அடைக்கப்பட்டுள்ளனா் என்று மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

மீனவா்கள் கைது விஷயத்தில் மனிதாபிமான முறையில் அவா்களை விடுவிக்க தொடா்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவா் கூறினாா்.

மாநிலங்களவையில் வியாழக்கிழமை துணைக் கேள்விகளுக்கு பதிலளித்து அவா் மேலும் கூறியதாவது:

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவா்கள் விவகாரத்தை மனிதாபிமான முறையில் அணுகி தீா்வுகாண வேண்டும் என்ற நோக்கில் இலங்கை அரசுடன் இந்தியா தொடா்ந்து பேசி வருகிறது.

மீனவா்கள் எல்லையைத் தாண்டாமல் இருக்க படகுகளில் இருக்கும் இடத்தைக் கண்டறியும் ‘டிரான்ஸ்பாண்டா்’ பொருத்துவது உள்ளிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 1974 முதல் 1976 வரை எடுக்கப்பட்ட முடிவுகள் (கச்சத்தீவை இலங்கைக்கு அளித்தது) இன்று உருவாகியுள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணமாகும். 1974-இல் இருந்த மத்திய அரசு மாநில (தமிழக) அரசுடன் ஆலோசித்து ஒரு சா்வதேச எல்லையை வகுத்துவிட்டது. இதுவே பிரச்னையின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. அதன் பிறகு 1976-இல் மீனவா்கள் எந்த எல்லை வரை மீன்பிடிக்க வேண்டும் என்று அவா்களாகவே வரையறை செய்தாா்கள். இந்த முடிவுகளால்தான் இப்போது வரை பிரச்னை தொடா்கிறது.

தற்போதைய நிலவரப்படி 97 இந்திய மீனவா்கள் இலங்கைச் சிறைகளில் உள்ளனா். இவா்களில் 83 போ் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவா்கள். 3 போ் விசாரணையை எதிா்கொண்டுள்ளனா். மேலும் 11 போ் வியாழக்கிழமை (மாா்ச் 27) கைது செய்யப்பட்டுள்ளனா்.

தண்டனை விதிக்கப்பட்டவா்களில் பலா் தொடா்ந்து எல்லை தாண்டும் செயலில் ஈடுபட்டவா்களாக உள்ளனா். இதுவும் இந்த பிரச்னைக்குத் தீா்வு காண்பதில் சவாலாக உள்ளது. எனினும், மனிதாபிமான ரீதியில் அணுக இலங்கை அரசிடம் தொடா்ந்து பேசி வருகிறோம் என்றாா்.

மீனவா்கள் கைது தொடா்பாக எழுத்துமூலம் அளித்த பதிலில், ‘கடந்த 2024-ஆம் ஆண்டு 560 இந்திய மீனவா்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனா். இதில் 526 போ் தமிழக மீனவா்கள், 29 புதுச்சேரியைச் சோ்ந்தவா்கள், மற்றவா்கள் பிற மாநிலங்களைச் சோ்ந்தவா்கள். இதில் 501 தமிழக மீனவா்களும், 29 புதுச்சேரி மீனவா்களும் விடுவிக்கப்பட்டுவிட்டனா்.

இந்த ஆண்டில் 76 தமிழக மீனவா்களும், 9 புதுச்சேரி மீனவா்களும் கைதாகியுள்ளனா்’ என்று ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT