ENS
இந்தியா

குழந்தை வேண்டி மாந்திரீக பூஜை: முதியவர் தலை துண்டித்துக் கொலை!

பிகாரில் குழந்தை பாக்கியம்வேண்டி, முதியவரின் தலையைத் துண்டித்து கொன்ற மாந்திரீகர்

DIN

பிகாரில் குழந்தை வேண்டி, முதியவரின் தலையைத் துண்டித்து கொன்ற மாந்திரீகரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பிகாரில் ஔரங்காபாத் மாவட்டத்தில் யுக்வல் யாதவ் (65) என்பவர் காணாமல் போய்விட்டதாக காவல்துறையினரிடம் கடந்த வாரம் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வழக்குப்பதிந்த காவல்துறையினர். யாதவை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, அண்டை கிராமத்தில் எரிக்கப்பட்ட நிலையில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்தில் மோப்ப நாய்களைக் கொண்டு ஆய்வு செய்தனர். மேலும், சம்பவ இடத்தில் யுக்வலின் செருப்புகள் இருந்ததைக் கொண்டு, மோப்ப நாய்கள் மாந்திரீகர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றன.

அங்கிருந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள்தான் யுக்வலை கொலை செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, சுதிர் பாஸ்வான் என்பவர் குழந்தை வேண்டி, மாந்திரீகர் ராமாஷிஷ் ரிக்யாசனுடன் சேர்ந்து பூஜை நடத்தினார். மேலும், ஒரு மனிதரின் தலையைத் துண்டித்து, அவரின் தலையை தீயில் எரித்தால் மட்டுமே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறியதால், யுக்வலை கடத்தி கொலை செய்ததாக ஒப்புக் கொண்டனர்.

அதுமட்டுமின்றி, மற்றுமொரு இளைஞரையும் கொலை செய்து, உடலை கிணற்றில் வீசியதாகவும் கூறினர்.

இதனையடுத்து, இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சுதிர் பாஸ்வான் மற்றும் மாந்திரீகரின் உதவியாட்கள் மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மாந்திரீகர் ராமாஷிஷ் ரிக்யாசனை தேடும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

SCROLL FOR NEXT