டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்) AP
இந்தியா

சிறந்த நண்பர் மோடி: டிரம்ப் பெருமிதம்!

இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் சிறப்பாகச் செயல்படும் என்றும் கருத்து

DIN

பிரதமர் நரேந்திர மோடியை சிறந்த நண்பர் என்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டியதுடன், வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்தும் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் பேசியதாவது, ``உங்களிடம் ஒரு சிறந்த பிரதமர் குறித்து சொல்ல விரும்புகிறேன். அவர் மிகவும் புத்திசாலி மற்றும் என் நண்பர். பிரதமர் மோடி சமீபத்தில் இங்கு வந்தார். நாங்கள் எப்போதும் மிகவும் நல்ல நண்பர்கள்.

உலகிலேயே அதிகமான வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அது மோசமானது. அதே நேரத்தில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் சிறப்பாக செயல்படும்’’ என்று தெரிவித்தார்.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை டிரம்ப் பதவியேற்ற சில நாள்களிலேயே, அவரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார்.

அமெரிக்கா மீது இந்தியா உள்பட சில நாடுகளும் அதிக வரி விதிப்பதாக டிரம்ப் முன்னர் கூறியிருந்தார். மேலும், அமெரிக்கா மீது வரி விதிக்கும் நாடுகளின் மீது ஏப்ரல் 2 ஆம் தேதிமுதல் பரஸ்பர வரிவிதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், டிரம்ப்பின் தற்போதைய கருத்துகள் இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத்தில் குறிப்பிட்ட மாற்றம் ஏற்படலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT