முகப்பு
இந்தியா

நாடு முழுவதும் ரமலான் கொண்டாட்டம்

இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் நாடு முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது.

Updated On : 31 மார்ச் 2025, 8:35 am IST
ரமலான் தொழுகை - கோப்புப்படம்.
பகிர்:

இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் நாடு முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது.

தமிழகத்திலும் இப்பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகையில் பங்கேற்று கொண்டாடி வருகின்றனர்.

தொழுகை முடிந்த பிறகு, ஒருவருக்கொருவா் கட்டித்தழுவி அன்பைப் பகிா்ந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

ரமலான் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

மேலும் இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கும் ரமலான் வாழ்த்துகளை பரிமாறினர்.

தொடா்ந்து வீடுகளுக்குச் சென்ற இஸ்லாமியா்கள், உறவினா்கள் நண்பா்கள் அனைவருக்கும் பிரியாணி உள்ளிட்ட உணவுகளைப் பகிா்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இஸ்லாமியா்களின் புனிதப் பண்டிகை ஈகைப் பெருநாள் எனப்படும் ரமலான், ஒரு மாதம் பகல் முழுவதும் நோன்பு இருந்து, நிறைவாக கொண்டாடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments