Instagram | Divya Spandana
இந்தியா

பாகிஸ்தானுடன் போர் தீர்வல்ல: நடிகை திவ்யா

பஹல்காம் தாக்குதலுக்கு போர் தீர்வல்ல என்று நடிகை திவ்யா ஸ்பந்தனா கருத்து கூறியுள்ளார்.

DIN

பஹல்காம் தாக்குதலுக்கு போர் தீர்வல்ல என்று நடிகை திவ்யா ஸ்பந்தனா கருத்து கூறியுள்ளார்.

பெங்களூரில் காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் முன்னாள் தலைவரும் நடிகையுமான திவ்யா ஸ்பந்தனாவிடம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் தெரிவித்ததாவது, ``எந்த வகையிலும் இந்தியாவில் வன்முறையை ஆதரிக்க முடியாது. பாகிஸ்தானுடன் போரிடுவது ஒரு தீர்வாக அமையாது.

மக்களைப் பாதுகாக்கத்தான் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆனால், அவர்கள் அரசின் தோல்விக்காக போர் அறிவிப்பது முறையானதல்ல. போரின் இறுதியில் நமது வீரர்களும் இறப்பார்கள்.

போர் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வது, அரசின் கடமை. எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், எந்த வகையிலும் வன்முறைக்கு எதிரானதுதான். வன்முறை யாருக்கும் பயனளிக்காது’’ என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொஞ்சும் எழிலிசையே.. அனு!

பாஜகவின் தூண்டுதலில் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் - திருமா | Vck | TVK | Karur

திமுகவிற்கும் விஜய்க்கும் Underground dealing ஆ? - திருமா | TVK | VCK | Karur

கார்கால சிலிர்ப்புகள்... குஷி கபூர்!

அப்பாவித்தனமான முகம் ஷுப்மன் கில்லை காப்பாற்றியது: அபிஷேக் சர்மா

SCROLL FOR NEXT