அட்டாரி-வாகா எல்லை.  
இந்தியா

பாகிஸ்தானுடன் அனைத்து வகையான அஞ்சல் மற்றும் பார்சல் போக்குவரத்துக்குத் தடை

பாகிஸ்தானுடன் அனைத்து வகையான அஞ்சல் மற்றும் பார்சல் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

DIN

பாகிஸ்தானுடன் அனைத்து வகையான அஞ்சல் மற்றும் பார்சல் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தான் மீது இந்தியா ராஜீய ரீதியில் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, அட்டாரி-வாகா எல்லையை மூடுவதாக அறிவித்த இந்தியா, பாகிஸ்தானியா்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை ரத்து செய்து, அவா்கள் வெளியேற உத்தரவிட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தானுடன் அனைத்து வகையான அஞ்சல் மற்றும் பார்சல் போக்குவரத்துக்குத் மத்திய அரசு சனிக்கிழமை முதல் தடை விதித்துள்ளது.

மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அஞ்சல் துறை இதுதொடர்பான நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்திய ராணுவ அதிகாரிகள் குறித்த போலியான செய்திகளை வெளியிடும் பாகிஸ்தான் ஊடகங்கள்!

பாகிஸ்தானில் இருந்து அனைத்து வகையான அஞ்சல் மற்றும் பார்சல்களின் பரிமாற்றத்தை நிறுத்த வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

முன்னதாக இன்று பாகிஸ்தானுடன் நேரடி மற்றும் மறைமுக இறக்குமதி, ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

ஆலங்குடி அருகே தென்னை நாா் தொழில்சாலையில் தீ விபத்து

திண்டுக்கல்லுக்கு 100 புதிய பேருந்துகள் தேவை: அமைச்சா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT