கோப்புப் படம் 
இந்தியா

ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றி...

DIN

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சல் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கரியாபாந்து மாவட்டத்தில் மோட்டிபானி கிராமத்தின் அருகிலுள்ள வனப்பகுதியில் நேற்று (மே.2) மாலை நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் ஈ-30 படையினர் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் அப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்களுடன் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல்கள் முடிவடைந்த பின்னர் நக்சல்கள் பதுங்கியிருந்த இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது, தாக்குதலில் பலியான நக்சல் ஒருவரின் இறந்த உடல் மற்றும் வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் அங்கிருந்தது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் பலியானது ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த யோகேஷ் எனவும் அவர் நக்சல் அமைப்பின் மண்டல ஆணைய உறுப்பினராகச் செயல்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சத்தீஸ்கரில் 2025-ம் ஆண்டு துவங்கியதிலிருந்து சுமார் 145 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்குத் தடை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிப்பு டிரெண்டிங்கில் பாஜக! காங்கிரஸுடன் மோதல்!

அது மிகைப்படுத்தப்பட்ட உணர்வு... அதிர வைத்த தனுஷ்!

பிகார் தேர்தலில் உலக வங்கியின் ரூ. 14,000 கோடி: புள்ளிவிவரங்களுடன் பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு!

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் - ரயில் நிலையத்தை இணைக்கும் பணி! செங்கல்பட்டு சாலை மூடல்!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வாட்டர் மெலன் ஸ்டார் வெளியேற்றம்!

SCROLL FOR NEXT