சத்தீஸ்கரில் 15 நக்சல்கள் சுட்டுக்கொலை! தொடரும் தேடுதல் பணி!!
சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் 15-க்கும் மேற்பட்ட நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது பற்றி...
சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் 15-க்கும் மேற்பட்ட நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் கர்ரேகுட்டா மலைப்பகுதி அருகே இன்று(புதன்கிழமை) பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு, நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
அப்போது நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் நடைபெற்ற இந்த மோதலில் 15-க்கும் மேற்பட்ட நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவீன ஆயுதங்கள், வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து இப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று(செவ்வாய்க்கிழமை) பெண் நக்சல் ஒருவர் இதேபகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.