இந்திய ராணுவம் 
இந்தியா

பாலாகோட் தாக்குதலுக்கு நேர் எதிரான சிந்தூர் தாக்குதல்! ஏன்? எப்படி?

பாலாகோட் தாக்குதலுக்கு நேர் எதிரான சிந்தூர் தாக்குதல் அமைந்திருந்ததாகத் தகவல்.

DIN

இந்தியர்களின் காலை பெரும்பாலும் பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதல் பற்றிய செய்தியுடன்தான் விடிந்திருக்கும்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜெய்ஸ்-இ-முகம்மது அமைப்பின் 4 முகாம்கள், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் 3 முகாம்கள் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் 2 முகாம்கள் என 9 பயங்கரவாத முகாம்கள் மீது செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இந்திய முப்படைகள் தாக்குதல் நடத்தி திரும்பியிருக்கிறது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த அதிரடித் தாக்குதலை இந்தியா நடத்தியிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் இந்திய ராணுவம் நடத்திய மிக முக்கிய தாக்குதலாகவும் இந்த சிந்தூர் தாக்குதல் மாறியிருக்கிறது.

ஆனால், பாலாகோட் தாக்குதலிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக சிந்தூர் தாக்குதல் அமைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே 2016 அதிரடித் தாக்குதல், 2019 பாலாகோட் விமானப்படைத் தாக்குதல்கள் ஒன்றுபோல நடத்தப்பட்டிருந்தாலும் இதிலிருந்து சிந்தூர் மாறுபட்டது என்கிறார்கள்.

பாலாகோட் தாக்குதலின்போது ஒரே ஒரு பயங்கரவாத முகாம் தான் இலக்கு. சிந்தூர் தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள்.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய முகாம் - பாகிஸ்தான் உள் பகுதிகளிலும் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்புக் காஷ்மீர் பகுதிகளிலும் தாக்குதல்

சிந்தூர் தாக்குதலில் அதிநவீன துல்லியமன வெடிபொருள்களும், முகாம்களை கண்டறியும் டிரோன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாலாகோட் தாக்குதல், விமானப் படையால் மட்டும் நடத்தப்பட்டது.

மிக அபாயகரமான இரண்டு பகுதிகளில் இந்திய ராணுவம் எல்லையைக் கடந்துசென்று, பாகிஸ்தானின் இதயம்போன்ற பகுதிகளில் சிந்தூர் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இது 2019 தாக்குதலைக் காட்டிலும் மிகப்பெரியது.

சிந்தூர் தாக்குதலில்

தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பு, அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு இலக்குகள் உறுதி செய்யப்பட்டன.

மிகத் துல்லியமான தாக்குதல்களை நடத்தும் ஏவுகணைகளின் பயன்பாடு.

இந்திய விமானப்படை, கடற்படை மற்றும் ராணுவத்தின் ஒருங்கிணைப்போடு நடத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

மோடி பிறந்த நாளுக்கு மெஸ்ஸி பரிசு..! காரணமாக இருந்தவர் யார்?

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT