சீறிப் பாயும் பாக் ஏவுகணை. கோப்புப்படம்
இந்தியா

பாகிஸ்தானில் 3 நகர்களின் மீது இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல்!

பாகிஸ்தானிலுள்ள லாகூர், இஸ்லாமாபாத், சியால்கோட் ஆகிய நகரங்களின் மீது இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியது பற்றி...

DIN

புது தில்லி: ஜம்மு - காஷ்மீரில் இன்றிரவில் பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும் இந்திய எல்லைக்குள் பறந்த பாகிஸ்தான் போர் விமானங்களும் ஏவுகணைகளும் வானிலேயே இடைமறித்து வெடிக்கச் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையோரப் பகுதிகளில் ஆங்காங்கே இரு தரப்பினரிடையே மோதல்கள் நடைபெறுவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

இந்த தாக்குதல்களால் இந்தியத் தரப்பில் உயிரிழப்பு ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்களுக்கு பதிலடியாக லாகூரில் இந்திய ராணுவம் ஏவுகணை மூலம் தாக்குதல்களை நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

லாகூர், இஸ்லாமாபாத், சியால்கோட் ஆகிய நகரங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விரிவான விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT