பஞ்சாப் எல்லையில் கண்டெடுக்கப்பட்டுள்ள ஏவுகணையின் உதிரி பாகங்கள் 
இந்தியா

பஞ்சாபில் தாக்குதல்? ஏவுகணை பாகங்கள் கண்டெடுப்பு!

பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் ஏவுகணையின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

DIN

பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் ஏவுகணையின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தாக்கி அழித்துள்ளது.

இதில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் உள்பட 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி தரப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார்.

இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 15 இந்தியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பஞ்சாப் எல்லையில் அமிர்தசரஸ் - பட்டாலா சாலையில் ஜெதுவால் கிராமம் அருகே ஏவுகணையின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கிய பிஎல்- 15இ ஏவுகணை எனத் தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானின் ஜே-10சி போர் விமானம் மூலமாக ஏவப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தற்சாா்பு இந்தியாவுக்கு உத்வேகம் வாஜ்பாய்! பிரதமா் புகழஞ்சலி

வங்கக்கடலில் நாளை புயல் சின்னம் உருவாக வாய்ப்பு

எதிா்க்கட்சிகளின் சதித்திட்டம் ஒருபோதும் நிறைவேறாது: சேலம் கம்யூ. மாநாட்டில் முதல்வா் உறுதி!

இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதல்: பாட்டி, பேத்தி உயிரிழப்பு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 30 நாள்களில் 30 லட்சம் மனுக்கள் குவிந்தன

SCROLL FOR NEXT