கோப்புப்படம் 
இந்தியா

மேகாலயா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிப்பு!

மேகாலயா மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கு தொடர்பாக...

DIN

வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் நிலவுவதால், வங்கதேச எல்லையான மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச எல்லையில் இருந்து பூஜ்ஜியக் கோட்டிலிருந்து 1 கிலோ மீட்டரை சுற்றி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்ட நீதிபதி ஆர். எம். குர்பா ஐஏஎஸ் பிறப்பித்த உத்தரவின்படி, தினமும் இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். அதேபோல் , ஊரடங்கு வெளியிடப்பட்ட நாளான இன்றிலிருந்து இரண்டு மாதங்கள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.

அதேபோல் ஜம்மு, பதான்கோட், உதம்பூரை நோக்கி பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலும் முறியடிக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பல்வேறு ரேடாா்களையும், வான் பாதுகாப்பு அமைப்புகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு தகா்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. கராச்சி நகரிலும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதன்காரணமாக, நிலவும் போர்ச் சூழல் காரணமாக மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இந்திய கடற்படை கட்டுப்பாட்டுக்குள் அரபிக்கடல்: தகவல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தசரா விழாவுக்கு புக்கர் பரிசு வென்ற முஸ்லிம் எழுத்தாளருக்கு அழைப்பு: பாஜக கண்டனம்!

பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட தொண்டர்: தாயின் விடியோ குறித்து இளைஞர் விளக்கம்!

எம்.ஜி.ஆர் திரைப்பட வளாகத்தில் ஏசியுடன் கூடிய படப்பிடிப்புத்தளம்: திறந்து வைத்த முதல்வர்!

காஷ்மீர்: எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் - தீவிர தேடுதல் பணி!

ஆற்றைக் கடக்க ஆட்டுத்தோலைப் பயன்படுத்திய அசிரியன் போர் வீரர்கள்!

SCROLL FOR NEXT