ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.  
இந்தியா

ஜனநாயகத்தில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை: ஆந்திர முதல்வர்

ஜனநாயகத்தில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

DIN

ஜனநாயகத்தில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள வஜ்ரகரூர் கிராமத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், சமீபத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இது மன்னிக்க முடியாத செயல் மட்டுமின்றி இந்தியாவின் இறையாண்மைக்கும் மனிதநேயத்திற்கும் சவால் விடும் செயல். இந்த நாட்டில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக பிரதமர் மோடி கடுமையான நடவடிக்கை எடுப்பார்.

பாகிஸ்தான் தனது போக்கை சரிசெய்திருக்க வேண்டும். ஆனால் அவர்களின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்கள் இந்தியாவை ஆபரேஷன் சிந்தூர் போன்ற நடவடிக்கைகள் மூலம் பதிலளிக்க கட்டாயப்படுத்திவிட்டது.

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! - விக்ரம் மிஸ்ரி

இந்த நடவடிக்கையில் வீரமரணம் அடைந்த ஆந்திரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் முரளி நாயக்கிற்கு தான் அஞ்சலி செலுத்துவதாகவும், மேலும் அவரது குடும்பத்தினருடன் நாடு எப்போதும் துணை நிற்கும்.

இரண்டு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய நாயக், நாட்டிற்காகப் போராடி வீரமரணமடைந்தார். நமது வீரர்கள் ஓய்வு அல்லது உணவு இல்லாமல் நம்மைப் பாதுகாக்கிறார்கள்.

ஆந்திர முழுவதும் உள்ள மக்கள் விழிப்புடன் அதேசமயம் கடினமான காலங்களில் தேசத்துடன் ஒற்றுமையாக நிற்க வேண்டும். தைரியத்துடனும் ஒற்றுமையுடனும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது நமது கடமை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் தலைவன் தலைவி: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

உத்தரகண்ட்: பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்

ரஷிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

ஓடிடியில் ஹரி ஹர வீர மல்லு!

காலை இரவு உணவைத் தவிர்த்தல் சரியா? டயட் முறைகள் உடலுக்கு நல்லதா? தவறான நம்பிக்கைகளும் உண்மையும்...

SCROLL FOR NEXT