ராமர் கோயிலில் யோகி ஆதித்யநாத்.  
இந்தியா

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்று, மீதமுள்ள கட்டுமானப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

DIN

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்று, மீதமுள்ள கட்டுமானப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

அப்போது கட்டுமானப் பணிகளின் நிலை குறித்து உத்தரப் பிரதேச முதல்வருக்கு ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர்கள் விளக்கினர்.

கட்டுமானப் பணிகளை ஆய்வுசெய்யும் போது, ​​தேவையான வழிகாட்டுதல்களையும் யோகி ஆதித்யநாத் வழங்கினார் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயிலுக்கு வருவதற்கு முன், ஹனுமன்கர்ஹிக்குச் சென்று துறவிகளைச் சந்தித்து அங்கும் அவர் பிரார்த்தனை மேற்கொண்டார்.

தவறான தகவல்களைப் பரப்பிய பாகிஸ்தான்: சோஃபியா குரேஷி

ராமஜென்மபூமி வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பையடுத்து அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட்டு வருகிறது.

கோயில் தரைதளக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கருவறையில் மூலவரான ஸ்ரீபாலராமா் சிலை கடந்த ஜனவரி 22-ஆம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதையடுத்து, நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் அயோத்தி ராமா் கோயிலுக்கு தினமும் வந்து வழிபட்டு செல்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெற்குப்பை நூலகத்துக்கு மாநில அளவிலான விருது

தெய்விகம் பெண்மை... சாஹிதி தாசரி!

ஹாங்காங் தீ விபத்து: 75 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்! 280 பேர் மாயம்!

முதல் டி20: வங்கதேசத்தை வீழ்த்தி அயர்லாந்து அசத்தல்!

புலிக்கூடு புத்த தலத்தில்... ருசிரா ஜாதவ்!

SCROLL FOR NEXT