பாகிஸ்தானிலிருந்து அலை அலையாய் ஏவப்பட்ட ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: விமானப்படை தளபதி
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விமானப்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ. கே. பாரதி விளக்கம்...
புது தில்லி: பாகிஸ்தானிலிருந்து அலை அலையாய் ஏவப்பட்ட பெரும்பாலான ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ. கே. பாரதி தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவர் பேசியதாவது: “நமது 7 நகரங்களில் விமானப்படை தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தானிலிருந்து அலை அலையாய் ஏவப்பட்ட பெரும்பாலான ட்ரோன்களையும் ஆளில்லா சிறிய ரக விமானங்களையும் இந்திய வான் வெளி பாதுகாப்பு அமைப்புகளான ’பேச்சோரா’, ‘சமர்’ ஆகியவற்றால் வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தப்பட்டன. இங்குள்ள அமைப்புகளுக்கு எவ்வித சேதமும் உண்டாகவில்லை”.
இதையும் படிக்க: ஆபரேஷன் சிந்தூரில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி! - முப்படை அதிகாரிகள்
Advertisement
Advertisement
”இதனிடையே, இந்த தொடர் சண்டையில் இந்திய விமானப்படையால் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுக்குமொரு உத்தியாக சிவில் விமானங்களை வானில் இயக்க அந்நாட்டு அரசு அனுமதியளித்தது. அப்பாவி மக்களின் உயிரை பொருட்படுத்தாமல், பாகிஸ்தான் சிவில் விமானங்களை பறக்கவிட்டது. எனினும், பொறுமை காத்த நமது வீரர்கள் மிக துல்லியமாக சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பாணியில் எதிரி இலக்கை தாக்கினர்.
நாம் மோதுவது பாகிஸ்தான் ராணுவத்துடனோ அந்நாட்டிலுள்ள வேறெவருடனோ அல்ல, இந்த சண்டை முழுக்க முழுக்க பயங்கரவாதிகளுடன் மட்டுமே” என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.