கோப்புப் படம் 
இந்தியா

ஜம்மு - காஷ்மீர்: 3 நாள்களில் 6 முக்கிய பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றி...

DIN

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கைகளில் முக்கிய பயங்கரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்து, ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மூன்று நாள்களாக காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட இருவேறு நடவடிக்கைகளில் முக்கிய பயங்கரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (மே 16) செய்தியாளர்களுடன் பேசிய ராணுவ உயர் அதிகாரி தனஞ்ஜய் ஜோஷி கூறுகையில், தெற்கு காஷ்மீரில் மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் அம்மாநில காவல் துறையினர் இணைந்து நடத்திய இரண்டு முக்கிய நடவடிக்கைகளின் மூலம் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் நடவடிக்கைகள், ஷோப்பியன் மாவட்டத்தின் கெல்லார் மற்றும் புல்வாமாவின் ட்ரால் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இத்துடன், இவை அனைத்தும் பாதுகாப்புப் படையினர் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கைகளின் மூலம் சாத்தியமடைந்ததாக உயர் அதிகாரி தனஞ்ஜய் ஜோஷி புகழாரம் சூட்டியுள்ளார்.

இதையும் படிக்க: ஜப்பானை பின்னுக்கு தள்ளியது இந்தியா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

செவிலியர்கள் போராட்டத்திற்கு காரணமே அதிமுக அரசுதான்: அமைச்சர் மா‌.சுப்பிரமணியன்

பாஜகவில் இணைந்த கமல்ஹாசன் பட நாயகி!

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

SCROLL FOR NEXT