பாகிஸ்தான் கொடிகளை விற்பனை செய்த அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட இ-வணிக நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கழகம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உண்டாகி, சண்டை நிறுத்தம் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தான் நாட்டின் கொடி மற்றும் அது தொடர்பான பொருள்களை விற்பனை செய்த நிலையில், இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்து, இதுபோன்ற விற்பனைகளை உடனடியாக நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில மோசமான செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய சட்டத்துக்கு எதிரான பொருள்களின் விற்பனையை இ-வணிக நிறுவனங்கள் உடனடியாக கைவிட வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.