சார் தாம் புனித யாத்திரைத் தலம். 
இந்தியா

உத்தரகண்ட்: புனித யாத்திரைத் தலங்களை நிர்வகிக்க புதிய குழு! அமைச்சரவை ஒப்புதல்!

உத்தரகண்டில் புனித யாத்திரைத் தலங்களை நிர்வாகிக்க புதிய குழு அமைக்கப்படவுள்ளதைப் பற்றி...

DIN

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள புனித யாத்திரைத் தலங்களை நிர்வகிக்க புதிய குழு அமைக்கப்படவுள்ளது.

உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான அமைச்சரவையில் அம்மாநிலத்திலுள்ள சார் தாம் மற்றும் ஆதி கைலாஷ் யாத்ரா உள்ளிட்ட புனித யாத்திரைத் தலங்களை நிர்வகிக்க புதிய குழுவை அமைக்க நேற்று (மே 16) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, முதல்வரின் செயலாளர் சையிலேஷ் பகாவுலி கூறுகையில், இமய மலைத் தொடரில் அமைந்துள்ள பல்வேறு வழிபாட்டுத் தலங்களுக்கும் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றது. இதனால், அவற்றை நிர்வகிக்க உத்தரகண்ட் தரம்ஸ்வா மற்றும் தீர்தாதன் பரிஷாத் போன்ற தனிக்குழுக்கள் தேவை எனக் கூறியுள்ளார்.

மேலும், புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்கி, நிர்வகிப்பதே அந்தக் குழுக்களின் பிரதான வேலை என்றும் அதன் மூலம் வழிபாட்டுத் தலங்களுக்கு மிகவும் எளிமையான, பாதுகாப்பான முறையில் செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், அந்தக் குழுவுக்கென்று அம்மாநில பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அம்மாநிலத்தில் மேம்படுத்தப்பட்டுள்ள சாலை மற்றும் விமானப் போக்குவரத்து வசதிகளினால் அங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ஜம்மு-காஷ்மீரில் வனப்பகுதிகளைச் சுற்றி வளைத்து பயங்கரவாத தேடுதல் வேட்டை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திடியூா் அருகே தடுப்பணை நீா்க்கசிவு: நான்குனேரி எம்.எல்.ஏ. ஆய்வு

இன்றைய நிகழ்ச்சிகள்.... திருநெல்வேலி

விவசாயி தற்கொலை

மேலப்பாளையத்தில் கரூா் வைஸ்யா வங்கி கிளை திறப்பு

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

SCROLL FOR NEXT