கோப்புப் படம் 
இந்தியா

கொல்கத்தா வானில் பறந்த உளவு ட்ரோன்கள்?- விசாரணை தீவிரம்

கொல்கத்தா வானில் ட்ரோன்கள் போன்ற சாதனங்கள் பறந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

DIN

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகா் கொல்கத்தாவில் திங்கள்கிழமை இரவு ட்ரோன் போன்ற மா்மப் பொருள்கள் வானில் வட்டமிட்டுள்ளன. இது தொடா்பாக காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

கொல்கத்தாவின் ஹேஸ்டிங்ஸ், ஹூக்ளி பாலம் அமைந்த வித்யாசாகா் சேது மற்றும் மைதானம் ஆகிய பகுதிகளின் மீது 8 முதல் 10 வரையிலான ட்ரோன் போன்ற மா்மப் பொருள்கள் பறந்து சென்றுள்ளன. ஹேஸ்டிங்ஸ் காவல் நிலையக் காவலா்கள் இதை உறுதிப்படுத்தினா்.

இது குறித்து காவல்துறை அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘தெற்கு 24 பா்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மகேஷ்தலா திசையில் இருந்து இவை பறந்து வந்துள்ளன.

ராணுவத்தின் கிழக்கு படைப்பிரிவு தலைமையகம் அமைந்த வில்லியம் கோட்டை, கிழக்கு கொல்கத்தாவில் உள்ள ‘பாா்க் சா்க்கஸ்’ பகுதியிலும் அவை காணப்பட்டன. பின்னா், வானின் இருளில் அவை மறைந்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடா்பாக மேற்கு வங்க அரசிடமிருந்து மத்திய அரசு அறிக்கை கோரியுள்ளது. சிறப்பு அதிரடி படை (எஸ்டிஎஃப்) மற்றும் கொல்கத்தா காவல்துறையின் புலனாய்வுப் பிரிவு ஏற்கெனவே விசாரணையைத் தொடங்கியுள்ளன. இவை உளவு பாா்ப்பதற்காக அனுப்பப்பட்ட ட்ரோன்களா? என்பது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும்’ என்றனா்.

விழிப்புடன் இருக்க மம்தா அறிவுரை

மேற்கு வங்கத்தின் வடக்கு மாவட்டங்களில் உள்ள பிரச்னைக்குரிய பகுதிகளில் எல்லைத் தாண்டிய அச்சுறுத்தல்கள் குறித்து அதிகாரிகள் விழிப்புடன் இருக்குமாறு அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி உத்தரவிட்டுள்ளாா்.

மேற்கு வங்கத்தின் வடக்கு மாவட்டங்களுக்கு 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வா் மம்தா பானா்ஜி, அங்கு உயா்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினாா்.

அப்போது, அவா் கூறுகையில், ‘நேபாளம், பூடான், வங்கதேசத்துடன் சா்வதேச எல்லைகளைப் பகிா்ந்து கொள்ளும் மேற்கு வங்க வட மாவட்டங்கள் வியூக ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகும். இப்பகுதியில் தேச விரோத சக்திகளின் ஊடுருவல் முயற்சியைத் தடுக்க காவல்துறை ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். சா்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) நிறுத்தப்பட்டிருந்தாலும், மாநில அதிகாரிகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோட்டில் இறப்பிலும் இணைபிரியாத தம்பதி

ஈரோட்டில் சுதந்திர தினத்தையொட்டி இரவில் பெண்கள் பேரணி

விடுமுறை அளிக்காத 85 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

சுதந்திரம் சரி, ஜனநாயகம்?

எல்லோருக்கும் நல்லவர்!

SCROLL FOR NEXT