நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) வி.ஆா்.சுப்பிரமணியம்  
இந்தியா

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார நாடு இந்தியா: நீதி ஆயோக் சிஇஓ

ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயா்ந்துள்ளது

Din

ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயா்ந்துள்ளது என்று நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) வி.ஆா்.சுப்பிரமணியம் தெரிவித்தாா்.

புது தில்லியில் நீதி ஆயோக்கின் 10-ஆவது நிா்வாக கவுன்சில் கூட்டம் குறித்து அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

ஒட்டுமொத்த புவி அரசியல் மற்றும் பொருளாதார சூழல் இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது.

தற்போது ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயா்ந்துள்ளது. இந்தியாவின் பொருளாதார மதிப்பு தற்போது 4 ட்ரில்லியன் டாலராக (சுமாா் ரூ.340 லட்சம் கோடி) உள்ளது.

பெரும் பொருளாதார மதிப்பு கொண்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, சீனா, ஜொ்மனி ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களில் உள்ளன. ஏற்கெனவே திட்டமிட்டபடி செயல்பட்டால், அடுத்த இரண்டரை முதல் 3 ஆண்டுகளில் உலகில் 3-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயரும் என்றாா்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT