கோப்புப் படம் AP
இந்தியா

அணுசக்தி பாதுகாப்பான ஆட்சியின் மீது முழு நம்பிக்கையுள்ளது: பாகிஸ்தான்!

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் குறித்து அந்நாட்டு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

DIN

பாகிஸ்தானின் ராணுவ கட்டளைகள் மற்றும் கட்டமைப்புகள் குறித்து அந்நாட்டு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான தாக்குதல்கள் நிறுத்தப்பட்ட சூழலில் இருநாடுகளும் அணு ஆயுதங்களைக் குறித்த தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.

ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், கடந்த மே 22 ஆம் தேதியன்று பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் அனைத்தும், சர்வதேச அணுசக்தி ஆணையத்தின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் எனவும்; அவை அனைத்தும் அத்தகைய முரட்டுத் தனமான நாட்டில் பாதுகாப்பாக இல்லை, எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், தங்களது கட்டுப்பாட்டிலுள்ள அணு ஆயுதங்கள் குறித்து பாகிஸ்தான் அரசு, விரிவான அணுசக்தி பாதுகாப்பு ஆட்சியில் தங்களது நாடு நம்பிக்கையுடன் இருப்பதாக, நேற்று (மே 23) கூறியுள்ளது.

இதுகுறித்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:

”பாகிஸ்தான் அதன் விரிவான அணுசக்தி பாதுகாப்பான ஆட்சியின் வலிமையிலும் அதன் கட்டளைகள் மற்றும் கட்டமைப்புகளின் வலிமையில் முழு நம்பிக்கையுடன் உள்ளது.” எனத் தெரிவித்துள்ளது.

மேலும், சர்வதேச சமூகம் இந்தியாவின் அணுசக்தி குறித்தே அதிகம் கவலைப்பட வேண்டுமெனவும், இந்தியாவின் அரசியல், ஊடகம் மற்றும் சமூகப் பிரிவினைகள் ஆகியவற்றில் அதிகரித்து வரும் தீவிரமையமாக்கலினால், அவர்களது அணுசக்தி தொடர்பான நியாயமான கவலைகளை அதிகரித்துள்ளதாகவும், குற்றம்சாட்டியுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தானின் அணு ஆயுத அச்சுறுத்தலையும், அவர்களது எல்லையைக் கடந்த பயங்கரவாதத்தையும், இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மே 26ல் குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி: பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

SCROLL FOR NEXT