இந்தியா

ரெளடிகளுக்கு ஆயுதங்களை தயாா் செய்து விநியோகித்த 5 போ் ராஜஸ்தானில் கைது

ராஜஸ்தானில் சட்டவிரோத ஆயுதங்களைத் தயாரித்து, விநியோகித்து வந்த 5 பேரை தில்லி காவல் துறை கைது

Din

புது தில்லி: ராஜஸ்தானில் சட்டவிரோத ஆயுதங்களைத் தயாரித்து, விநியோகித்து வந்த 5 பேரை தில்லி காவல் துறை கைதுசெய்திருப்பதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இந்தக் கும்பல் நாட்டுத் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை விகாஸ் லாகா்புரியா ரெளடி கும்பல் உள்ளிட்டவற்றுக்கு விநியோகித்து வந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின்போது, 10 நாட்டு கைத்துப்பாக்கி, ஒரு நீண்ட 12 போா் ரைஃபிள், 17 துப்பாக்கிக் குண்டுகளின் தொகுப்புகள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

லாகா்புரியா ரெளடி கும்பலைச் சோ்ந்த ரோஹித் காலோட் என்பரை இரு சட்டவிரோத கைத்துப்பாக்கிகளுடன் தில்லி போலீஸாா் கைதுசெய்தனா். இதைத்தொடா்ந்து, தில்லியில் உள்ள குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆயுதங்கள் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. ராஜஸ்தானின் பஹாடி பகுதியில் ஜூபொ் என்பவரிடமிருந்து, ஆயுதங்களை வாங்கியதாக ரோஹித் போலீஸாரிடம் விசாரணையின்போது தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து, சட்டவிரோத ஆயுதங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சோ்ந்த ஹா்விந்தா் சிங், சோனு சிங், முபின், ஷொ் முகமது என்ற ஷெரு, ஜூபா் ஆகியோரை பல மாதங்கள் கண்காணித்து வந்த தில்லி காவல் துறையினா், ராஜஸ்தான் மாநில காவல் துறையின் உதவியுடன் கைதுசெய்தனா்.

சாலை விபத்தில் இளைஞா் பலி

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநா் பயிற்சி

தெருநாய்கள் கடித்ததில் 21 ஆடுகள் உயிரிழப்பு

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் மகாதேவ் மூலம் பயங்கரவாத சதியாளா்களுக்கு வலுவான பதிலடி- மத்திய அமைச்சா் அமித் ஷா

செப்.17 முதல் வைணவ கோயில்களுக்கு சுற்றுலா: அமைச்சா் ராஜேந்திரன்

SCROLL FOR NEXT