இந்தியா

9000 குதிரைத் திறன் மின்சார ரயில் என்ஜின்: பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்!

குஜராத்தில் முதல் மின்சார ரயில் என்ஜிசன் ஆலை திறப்பு தொடர்பாக...

DIN

குஜராத்தின் தாஹேத்தில் உள்ள இந்திய ரயில்வேயின் மின்சார ரயில் என்ஜின் ஆலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

பிரதமர் மோடி குஜராத்துக்கு இரண்டு நாள்கள் அரசுப் பயணமாக வந்துள்ளார். இன்று(மே 26) காலை வதோராவில் சாலைப் பேரணியை நடத்தினார். அப்போது பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் திரண்டிருந்து பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, குஜராத்தின் தாஹேத்தில் உள்ள இந்திய ரயில்வேயின் மின்சார ரயில் என்ஜின் ஆலையை பிரதமர் மோடி தொடக்கி வைத்து, இந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட மின்சார ரயில் என்ஜினை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

இந்த ஆலையில் 9000 குதிரைத்திறன் கொண்ட மின்சார ரயில் என்ஜின்கள் உள்நாட்டு தேவைக்காகவும் ஏற்றுமதிக்காகவும் உற்பத்தி செய்யப்படுகிறது. சரக்கு ரயில் போக்குவரத்துக்கு இந்த என்ஜின்கள் முக்கிய பங்காற்றும்.

இந்நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர், தாஹோத்தில் சுமார் ரூ. 24,000 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடக்கி வைத்தார்.

தொடர்ந்து, வேராவல் - அகமதாபாத் இடையே வந்தே பாரத் விரைவு ரயிலையும், வல்சாத் - தாஹோத் நிலையங்களுக்கு இடையே விரைவு ரயிலையும் பிரதமர் தொடக்கி வைத்தார்.

இதையும் படிக்க: மும்பைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: போக்குவரத்து முடங்கியது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகாசி அருகே ஆண் சடலம் மீட்பு

மாநாடுகள் மட்டும் விஜய்க்கு வெற்றியைத் தேடித் தராது: செல்லூா் கே. ராஜூ

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

தமிழகத்தில் நிறையும் குறையும் நிறைந்த ஆட்சி: பிரேமலதா விஜயகாந்த்

திமுக கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்னையில் சமரசமில்லை! ஜி. ராமகிருஷ்ணன்

SCROLL FOR NEXT