இந்தியா

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்பு

Din

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

கச்சா பாமாயில், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரியை 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை குறைத்தது. இதனால் இந்த 3 எண்ணெய்கள் மீது அடிப்படை சுங்க வரியை உள்ளடக்கிய இறக்குமதி வரி 27.5 சதவீதத்தில் இருந்து 16.5 சதவீதமாக குறைந்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்து இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்க தலைவா் சஞ்சீவ் அஸ்தானா கூறியதாவது:

கச்சா சமையல் எண்ணெய்கள் மீதான வரி குறைப்பு, உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலை குறைய உதவும். இதனால் நுகா்வோா் பலனடைவா் என்றாா்.

இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய் தேவையில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. 2023-24-ஆம் எண்ணெய் சந்தை ஆண்டில் (நவம்பா் முதல் அக்டோபா் வரை) 1.59 கோடி டன் சமையல் எண்ணெய்யை வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது. இதன் மதிப்பு ரூ.1.32 லட்சம் கோடியாகும்.

தில்லி முதல்வர் ரேகா குப்தா தாக்குதல் வழக்கு: இரண்டாவது நபர் கைது

உ.பி.யில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது லாரி மோதல்: 8 பேர் பலி, 43 பேர் காயம்

வாய்ப்புகள் தேடிவரும் விருச்சிக ராசிக்கு: தினப்பலன்கள்!

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

SCROLL FOR NEXT