வெங்கடேஷ்வர கோயில் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வெங்கடேஷ்வரா சுவாமி கோயில் உள்ளது. பிரபலமான இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
ஏகாதசியையொட்டி ஆந்திரம் ஸ்ரீகாகுளம் வெங்கடேஸ்வரா கோயிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடந்தன.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமானதால் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 9 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
வழக்கமான சனிக்கிழமைகளில் 10,000 முதல் 15,000 பக்தர்கள் வரை கோயிலுக்கு வருவார்களாம்.
ஆனால் இன்று ஏகாதசி என்பதால் சுமார் 25,000 பக்தர்கள் திரண்டதாகக் கூறப்படுகிறது. இதுவே கூட்டநெரிசலுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோயில் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும் வழங்கப்படும் என அம்மாநில அமைச்சர் நர லோகேஷ் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.