பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சித் தொண்டர் துலர்சந்த் யாதவ் கொல்லப்பட்ட விவகாரத்தில், சர்ச்சைக்குரிய முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஐக்கிய ஜனதா தளத்தின் மொகாமா தொகுதியின் வேட்பாளருமான அனந்த் சிங்கையும் அவரது 2 கூட்டாளிகளையும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிகாா் சட்டப்பேரவைக்கு இம்மாதம் இரு கட்டங்களாக (நவ. 6, 11) தோ்தல் நடைபெறவுள்ளது. சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி பல்வேறு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், மொகாமா தொகுதியில் போட்டியிடும் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர் பிரியதர்ஷி பியூஷுக்காக அவரது மாமாவும், ஜன்சுராஜ் தொண்டருமான துலார்சந்த் யாதவ், கடந்த வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டபோது ஐக்கிய ஜனதா தள வேட்பாளர்களுடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஐக்கிய ஜனதா தளத்தின் மொகாமா தொகுதியின் வேட்பாளருமான அனந்த் சிங்கை பாட்னா காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை இரவு கைது செய்தனர். அனந்த் சிங், ராஷ்ரிடிய ஜனதா தளத்தில் இருந்துள்ளார். அதன்பின்னர், ஐக்கிய தனதா தளத்தில் இணைந்து எம்.எல்.ஏ.வானார். அனந்த் சிங்கின் மனைவி நீலம் தேவி தற்போது மொகாமா எம்.எல்.ஏவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.