மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியுடன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ். 
இந்தியா

பிகாரில் மகா கூட்டணி ஆட்சியில் தலித், முஸ்லீம் துணை முதல்வர்கள்! - தேஜஸ்வி சூசகம்!

பிகாரில் மகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தலித், முஸ்லீம் துணை முதல்வர்கள் இருப்பார்கள் என முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பிகார் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாள்களே உள்ள நிலையில் , எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஒரு முஸ்லிம் மற்றும் ஒரு தலித் உள்பட பல துணை முதல்வர்கள் இருப்பார்கள் என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் சூசகமாகக் கூறியுள்ளார்.

பிகாரில் 243 தொகுதிகளுக்கான பேரவைத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவும், நவம்பர் 14 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.

தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாள்களே இருப்பதால், தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன.

முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸின் மகா கூட்டணி மற்றும் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி தனியாகவும் களம் காண்பதால் பிகார் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், மகா கூட்டணியின் முதல்வர் முதல்வர் வேட்பாளரும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ், “பிகாரில் ஒரு முஸ்லிம் துணை முதல்வர் தனது தலைமையில் இருப்பார் என்று வெளிப்படையாகக் கூறவில்லை.

இருப்பினும், “அதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் நிராகரிக்கவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். துணை முதல்வர் எந்த சமூகத்திலிருந்தும் வரலாம்” எனத் தெரிவித்தார்.

Tejashwi Yadav's multiple deputy CM plan in Bihar includes Muslims and Dalits

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி ஆஸ்தானம்

பைக்குகள் திருடிய இருவா் கைது

ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தடை செய்ய முடியுமா? பொதுச் செயலர் பதில்!

வாரிசுகளின் கடமை!

விளையாடித்தான் பாா்ப்போமே...

SCROLL FOR NEXT