முகப்பு
இந்தியா

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு புயல் எச்சரிக்கை!

வங்கக் கடலில் புயல் சின்னம் உருவானது - ஐ.எம்.டி.

Updated On : 3 நவம்பர், 2025 at 1:53 PM
கோப்பிலிருந்து படம்
பகிர்:

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தால்(ஐ.எம்.டி.) புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியிருப்பதைத் தொடர்ந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது நாளை(நவ. 4) மேலும் வலுவடையக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது, மியான்மர் - வங்கதேசம் கடலோரப் பகுதிகளை நோக்கி வடக்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, அந்தமான் நிகோபார் தீவுகளையொட்டிய கடல் பகுதிகள் பயங்கர சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

summary

Cyclone alert issued for Andaman and Nicobar Islands: IMD

முழு கட்டுரையைப் படிக்க →