பிகாரில் வாக்காளர் பட்டியல் திருத்த இயக்கம் சுத்திகரிப்பு பயிற்சி என்றும், இந்திய ஜனநாயகத்தின் ஒரு மைல்கல் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்ளார்.
ஐஐடி கான்பூரில் நிறுவப்பட்ட நாளில் நடைபெற்ற கூட்டத்தில் ஞானேஷ்குமார் உரையாற்றினார். உலகின் மிகப்பெரிய வாக்காளர் பட்டியல் சுத்திகரிப்பு பயற்சி பிகாரில் மட்டும் நடத்தப்பட்டது. மேலும் இந்த இயக்கம் 12 மாநிலங்களில் 51 கோடி வாக்காளர்களுக்கு நீட்டிக்கப்பட்டவுடன், அது தேர்தல் ஆணையத்திற்கும் நாட்டிற்கும் ஒரு வரலாற்றுச் சாதனையாக இருக்கும்.
இந்த செயல்முறை நாடு முழுவதும் நிறைவடையும்போது, மக்கள் தேர்தல் ஆணையத்தைப் பற்றி மட்டுமல்ல, இந்தியாவின் ஜனநாயக உரிமையைப் பற்றியும் பெருமைப்படுவார்கள்.
தேர்தல் ஆணையம் சமீபத்தில் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) நவம்பர் முதல் பிப்ரவரி வரை 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் - கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கத்திலும் நடத்தப்படும் என்று அறிவித்தது. இவை அனைத்தும் 2026 இல் சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.
ஐஐடி-கான்பூரின் முன்னாள் மாணவன் நான். ஐஐடியில் கழித்த நான்கு ஆண்டுகளும் என் வாழ்க்கையின் மிகவும் துடிப்பான, மறக்க முடியாத ஆண்டுகள் என்றார்.
பிகார் தேர்தல் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் எளிமை ஆகியவற்றில் புதிய தரங்களை அமைக்கும் என்றும், மற்ற ஜனநாயக நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றம் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.