அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் ஒருவர் மட்டும் உயிர்த் தப்பிய நிலையில், அவரும் வாழ்நாள் முழுவதும் சோகத்திலேயே திளைத்திருப்பதாகக் கூறுகிறார்.
குஜராத் மாநிலத்தின் அகமதாபாதில், ஜூன் 12 ஆம் தேதியில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த 241 பேர் பலியாகினர். இருப்பினும், விமானத்தில் பயணித்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் மட்டும் உயிர்த் தப்பினார்.
விபத்தின்போது, ஜன்னல் வழியாக ரமேஷ் உயிர்த் தப்பிய போதிலும், விபத்தில் அவரது தம்பி அஜய் உயிரிழந்தார்.
இந்த நிலையில், விபத்தில் இருந்து உயிர்த் தப்பியபோதிலும் மனதளவிலும் உடலளவிலும் கஷ்டங்களை அனுபவித்து வருவதாக ரமேஷ் வருத்தம் தெரிவிக்கிறார்.
மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகக் கூறும் ரமேஷ், ``விமான விபத்தில் நான் ஒருவன் மட்டுமே உயிர்ப் பிழைத்தேன். என்னால் இதனை நம்ப முடியவில்லை.
இருப்பினும், எனது சகோதரரை நான் இழந்துவிட்டேன். அவரது இழப்பு மிகப்பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது.
எனது முதுகெலும்புபோல அவர்தான் இருந்தார். கடந்த சில ஆண்டுகளாக எனக்கு பெரும் ஆதரவாக இருந்தார்.
தற்போது வீட்டில் உள்ள எனது அறையில் நான் தனியாகவே இருக்கிறேன். எனது மனைவியுடனோ மகனுடனோ கூட நான் பேசுவதில்லை. தனியாக இருக்கவே விரும்புகிறேன். எனது குடும்பத்தினரும் இன்னும் மீளவில்லை.
எனது தாயார் பேசியே மாதங்கள் ஆகிவிட்டன. ஒவ்வொரு நாளும் வலி நிறைந்ததாகவே இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
ரமேஷுக்கு இழப்பீடாக 21,000 பவுண்டுகளை (ரூ. 24.9 லட்சம்) ஏர் இந்தியா கொடுத்தபோதிலும், அவரின் மருத்துவ மற்றும் தனிப்பட்டச் செலவுகளுக்கு போதவில்லை என்று கூறுகிறார்.
இதையும் படிக்க: ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.