சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில், நக்சல்களின் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளின் உற்பத்திக்கூடம், பாதுகாப்புப் படையினரால் அழிக்கப்பட்டுள்ளது.
சுக்மா மாவட்டத்தின் வனப்பகுதியில், ரகசிய தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கொயிமெண்டா - எராபள்ளி பகுதியில் உள்ள வனப்பகுதியில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் சூரிய ஒளி மின்சாரம் மூலம் செயல்பட்டு வந்ததாகவும்; அங்கிருந்து, 17-க்கும் மேற்பட்ட நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த உற்பத்திக்கூடத்தில் இருந்து ஏராளமான இயந்திரங்கள் மற்றும் வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், அங்கிருந்து ஆயுதம் செய்ய தேவையான மூலப் பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
முன்னதாக, சத்தீஸ்கரின் சுக்மா உள்ளிட்ட பஸ்தார் பகுதியில், நிகழாண்டில் (2025) மட்டும் நக்சல் அமைப்பின் பொதுச் செயலர் நம்பாலா கேஷவ் ராவ் உள்பட 249 நக்சல்கள், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிகார் தேர்தல்: காட்டாட்சிக்கு எதிராக பெண்கள் - பிரதமர் மோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.